அன்னை, தந்தை, தங்கை என்ற சிறு கூட்டிற்குள், தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கையில், எந்தவித உணர்ச்சிப் போராட்டங்களுக்கும் உள்ளாகாத மென்மையான மனம் படைத்தவள், தளிர்மதி. சிறுவயதிலே தன் பெற்றோரை இழந்து, சுற்றத்தார் ஒதுக்கிவிட, அனைவரிடமும் ஒதுங்கி, உற்றாரின் அன்பையும் உணரமுடியாத, எத்தனை இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தாலும், அவற்றையெல்லாம் தன்னகத்தே மறைத்துக்கொள்ளும் ஆழ்கடல்போல உணர்ச்சிகளற்ற இயந்திரமாக மாறி, தன் தொழில் ஒன்றையே கருத்தாகக் கொண்டவன், அருணன் செழியன். எதிர்பாராத சூழ்நிலையில் கண்கள் கலந்து, கருத்தொருமித்து, ஒருவரை ஒருவர் பிரிந்து மற்றவர் இயல்பாக மூச்சுக்கூட விடமுடியாது என்றளவு காதலில் கரைந்து, ஒருவர் மற்றவரின் அன்பில் திளைத்தவேளை தங்களைச் சுற்றி நடந்த சூழ்ச்சிகளாலும், தடங்கல்களாலும் எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாயினும், காதல் என்ற ஒற்றை கீற்றினால் உயிர்கள் பிணைக்கப்பட்டிருக்க, அனைத்து தடைகளையும் தகர்த்து தங்கள் வாழ்வின் பொருளை அடையும் பயணத்தின் சாரத்தையும், காதலின் பலவித பரிமாணங்களையும், நட்பின் தனித்தன்மையையும், குடும்பத்திலுள்ள உறவுகளின் இயக்கவியல்களையும் எடுத்துரைக்கும் உணர்வுகளை இயக்கும் நவீனம்.
In a small nest of mother, father and younger sister, in a life like a clear stream, Tilirmati is a gentle minded person who does not undergo any kind of emotional struggles. Arunan Chezhiyan, who lost his parents at a young age, shunned everyone around him, turned away from everyone, couldn't even feel the love of his loved ones, turned into an emotionless machine like the deep sea that hides all the natural disasters, and focused only on his career. In an unexpected situation, the eyes mingled, they met, they separated from each other and melted in love to such an extent that the other could not even breathe naturally, while one was immersed in the love of the other, faced with innumerable tribulations due to the intrigues and obstacles that happened around them, the lives were bound by the single thread of love, the essence of the journey to reach the meaning of their lives by breaking all the barriers, the essence of love. A sensuous modernism that highlights the multidimensionality, uniqueness of friendship and the dynamics of relationships within the family.