Haribalan Perumalsamyநான் முனைவர் ஹரிபாலன் பெருமாள்சாமி. நான்கொரியாவில் கடந்த 15 வருடமாக சியோல் மாநகரில் வசித்து வருகிறேன். நான் தற்பொழுது ஹன்யாங் பல்கலைகழகத்தில் புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு துறையில் ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மொழி மீது கொண்டுள்ள தீராத அன்பின் காரணமாக தமிழ் மொழி சார்ந்த தொன்மைகளை நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். இங்கு கொரியாவில் வாழும் மக்களும், அவர்களின் கலாச்சாரமும் அவர்கள் பேசும் கொரிய மொழியும் என்னை மிக வெகுவாக கவர்ந்தது. அதன்பொருட்டு நான் கொரிய மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கொரிய மொழியை கற்க, கற்க என்னை அறியாமல் மேலும் ஒரு ஈர்ப்பு உருவாகியது. அதனை தொடர்ந்து தமிழ்-கொரிய மொழியில் இடையேயுள்ள ஒற்றுமையை அலசி ஆராய்ந்து பல வியப்புள்ள தகவல்களை கண்டறிந்தேன். தமிழ்-கொரிய மொழியில் இடையேயுள்ள ஒற்றுமை, இலக்கணச் சான்று, கலாச்சராம் என நிறைய விடயங்கள் கண்டறிந்தேன். இவ்வளவு விடயங்கள் இருக்க இதை நான் வெளி உலகிற்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு கொரியா தமிழ் நண்பர்கள் இணைய வழி ஊடகம் மூலம் இலவசமாக கொரிய மொழியை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த 2009 முதல் தமிழ் மொழியை இங்குள்ள கொரிய மக்களுக்கும், கொரிய மொழியை தமிழ் மக்களுக்கும் கட்டணம் ஏதுமின்றி கற்றுக்கொடுத்து வருகிறேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ள, கொரிய மொழியில் நான் எனது கொரியா மாணவருடன் சேர்ந்து ஒருபுத்தகம் எழுதியுள்ளேன். மேலும் இப்பொழுது கொரிய மொழியை தமிழ் மொழி மூலம் எப்படி கற்றுக்கொள்வது என்று புத்தகம் எழுதியுள்ளேன். மேலும் தமிழ்-கொரிய மொழிகளுக்கு இடையேயுள்ள, இன்றளவும் பயன்பாட்டில் உள்ள ஒத்த அர்த்தமுடைய வார்த்தைகளை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். விரைவில் அதுபற்றியான Read More Read Less
An OTP has been sent to your Registered Email Id:
Resend Verification Code